பண்டிகை காலங்கள் வருது... கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை.... மத்திய அமைச்சர் தகவல்!

 
சர்ச்கரை

இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச சந்தைக்கு 60 லட்சம் டன் முதல் 70 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தி, நுகர்வுக்கான தேவை ஆகியவற்றைக் கணக்கிட்டு, ஏற்றுமதிக்கான சர்க்கரை அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த வகையில், கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான சர்க்கரை ஆண்டில், மத்திய அரசு 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதி வழங்கப்பட்ட ஏற்றுமதியில், முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், கிட்டத்தட்ட 40 லட்சம் டன்னுக்கும் அதிகமான சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சர்க்கரையும் விரைவில் ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கரை

இந்நிலையில், கடந்த ஆண்டில் உபரி சர்க்கரை இருப்பை பயன்படுத்தி, கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைப் போல், இந்த ஆண்டிலும் கூடுதல் சர்க்கரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்குமா? என்று சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், நடப்பு சர்க்கரை பருவத்தில், கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு வாய்ப்பு இருக்காது என்கிறார் மகாராஷ்டிரா உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

கரும்பு

இது தொடர்பாக அவர் கூறியதாவது... நடப்பு சர்க்கரைப் பருவத்தில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 3 கோடியே 86 லட்சம் டன் சர்க்கரை உற்பத்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், எத்தனால் உற்பத்திக்கு திருப்பப்பட்ட கரும்புச்சாறு அளவும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிராவில் பருவம் தப்பி பெய்த மழையால் 2 லட்சம் முதல் 3 லட்சம் டன் அளவுக்கு சர்க்கரை உற்பத்தி குறையும் நிலை உள்ளது. எனவே, எதிர்வரும் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு, சர்வதே சந்தைக்கு கூடுதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதிக்கும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web