மார்ச் 10ல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்!!

தமிழகத்தில் குளிரும், மழையும் குறைந்து வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில வாரங்களாக புதுவகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் மார்ச் 10ம் தேதி வெள்ளிக்கிழமை 1,000 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம். இந்த முகாமில் காய்ச்சல், இருமல் இருப்பவர்களை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அத்துடன் மீண்டும் நோய்த்தொறு பரவல் தொடங்கியிருப்பதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க