இன்றும் நாளையும் சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025 ‘... துணை முதல்வர் தொடங்கி வைப்பு!

 
ficci

தமிழகத்தின் தலைநகர் சென்னையில்  இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், ‘FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. இன்றும் நாளையும் 2 நாட்கள்  நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இதில்  நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார்.
 


இந்த மாநாட்டில் தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன், டிஜிட்டல் மீடியா உட்பட  அனைத்து பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி விவாதிக்கபடவுள்ளது. ‘PlayNext’ எனும் தலைப்பில் கேமிங் மற்றும் மின் விளையாட்டு  பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 
ஃபிக்கி (FICCI) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை அமைப்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களை ஒன்றிணைக்கும் மாநாடாக இது இருக்கிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் உழைப்பாளர்களுக்கான பட்டறைகள், கலந்துரையாடல்கள், தொழில் வளர்ச்சி சந்திப்புகள் உட்பட பல அம்சங்கள் இடம்பெறுகின்றன.
 
இந்த மாநாட்டில் FICCI M&E Committee மற்றும் FICCI Tamil Nadu State Council ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட, முன்னணி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
குறிப்பாக 
கெவின் வாஸ் – தலைவர், FICCI M&E குழு & CEO, JioStar
சந்த்யா தேவநாதன் – இணைத் தலைவர், FICCI M&E குழு & VP, Country Head – India, Meta
அர்ஜுன் நோஹ்வார் – இணைத் தலைவர், FICCI M&E குழு & SVP & Country GM – India & South Asia, Warner Bros. Discovery
டாக்டர் G.S.K. வேலு – தலைவர், FICCI தமிழ்நாடு மாநிலக் கவுன்சில்
ரவி கொட்டரக்காரா, சஞ்சய் ஏ. வாத்வா, ராக்லைன் வெங்கடேஷ், அங்கூர் வைஷ், ஷ்வேதா பஜ்பாய், மஹேஷ்
ஷெட்டி, கிருஷ்ணன் குட்டி, ரவிகாந்த் சப்னாவிஸ், முன்ஜல் ஷ்ரோஃப், வைபவ் சாவன், ஜேக்ஸ் பீஜாய், பீஜாய்
அர்ப்புதராஜ், ஆஷிஷ் குல்கர்னி ஆகியோரும் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதிவுக் கட்டணம்:

பொது விருந்தினர்கள் – ரூ.4,000 + 18% GST = ரூ.4,720
FICCI Corporate உறுப்பினர்கள் – 25% தள்ளுபடி
FICCI Associate உறுப்பினர்கள் – 10% தள்ளுபடி
Film Chamber உறுப்பினர்கள் – 50% தள்ளுபடி

பதிவு செய்ய:

இந்திய பொழுதுபோக்கு மற்றும் மீடியா துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற இருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.   விருப்பம் இருப்பவர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.frames.ficci.in/mebc/ இணையதளத்தில்   டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web