உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி.. ஐரோப்பாவில் 5 அணிகளும் தகுதியடைந்துள்ளன!
2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் இது வரை 42 அணிகள் பங்குபெற தகுதி பெற்றுள்ளன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்த உள்ள இந்தப் போட்டிக்கான அணித் தேர்வு சுற்றுகள் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. நேற்று நடைபெற்ற போட்டிகள் மூலம் வட, மத்திய அமெரிக்கா–கரீபியனில் மூன்று அணிகளும், ஐரோப்பாவில் ஐந்து அணிகளும் தகுதி பெற்றன.
போட்டியை நடத்த உள்ள மேற்கண்ட மூன்று நாடுகள் தானாகவே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளன. ஆசியாவில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய கால்பந்து அணிகள் தேர்வாகியுள்ளன.
ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா அணிகள் முன்னேறியுள்ளன. கராசியோ, பனாமா, ஹைதி ஆகியவை வட–மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவில் தகுதி பெற்றன.

ஐரோப்பாவில் குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகியவை இடம் பிடித்துள்ளன.
ஓசினியாவில் நியூசிலாந்தும் தகுதி பெற்றுள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவாடர், பாராகுவே, உருகுவே ஆகியவை கட்டாயப் பட்டியலில் இணைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
