சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகும் ஃபிபா உலகக்கோப்பை? டிக்கெட் விலை கிடுகிடு உயர்வு!

 
ஃபிபா ஃபிபா

2026-ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ஃபிபா (FIFA) நிர்வாகம் ஒரு மிகப்பெரிய 'விலை அதிர்ச்சியை' கொடுத்துள்ளது. தொடரின் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலையை ஃபிபா அதிரடியாக உயர்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சுமார் ரூ. 7.20 லட்சமாக ($8,680) இருந்த டாப்-டயர் டிக்கெட்டின் விலை, தற்போது சுமார் ரூ. 10.19 லட்சமாக ($10,990) உயர்ந்துள்ளது. ஒரு கால்பந்து போட்டியை நேரில் பார்க்க இவ்வளவு தொகையா? என ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

இறுதிப் போட்டி மட்டுமல்லாது, மற்ற பிரிவு டிக்கெட்டுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கான 2-வது பிரிவு (Category 2) டிக்கெட்டுகள் ரூ. 6.13 லட்சமாகவும், 3-வது பிரிவு டிக்கெட்டுகள் ரூ. 4.80 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகள் பங்கேற்கும் தொடக்க ஆட்டங்களுக்கான டிக்கெட் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தைக் காணக் குறைந்தபட்சமே ரூ. 2.47 லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்