விபத்தில் சிக்கிய போர்விமானம்!

 
போர்விமானம்

அரியானா மாநிலத்தில் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக ஜாகுவார் போர் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் மோர்னி மலைப்பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டது. 

இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பால்ட்வாலா கிராமம் அருகே விழுந்து நொறுங்கிவிட்டது. விபத்திற்கு முன்னதாக விமானத்தில் இருந்து சரியான நேரத்தில் வெளியேறிய விமானி, பாராசூட்டை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

போர்விமானம்

இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது, விமானி அந்த விமானத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று, பின்னர் விமானத்தில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது.  இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web