பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப் இந்தியா வருகை!

 
pinland

பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணத்துக்காக புதன்கிழமை இந்தியாவுக்கு வந்துள்ளார். வணிகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தில்லி விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத் துறை உயர்தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலெக்ஸாண்டர், சமூக ஊடகத்தில் ‘பின்லாந்து-இந்தியா இடையே உறவுகளை வலுப்படுத்தும் பயணம்’ எனத் தெரிவித்தார். பிரதமர் மோடியும் அவரை வரவேற்றி இருதரப்பு உறவுகள் மேலும் வளருமெனக் கூறியுள்ளார்.

அவரது இந்திய பயணம் ரெய்ஸினா மாநாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டில் புவி அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விவாதங்கள் நடைபெறும். அலெக்ஸாண்டர் ஸ்டப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருடன் சந்தித்து பல ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!