தீப்பெட்டி ஆலையில் கொடூர தீ விபத்து… தொழிலாளர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமை வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தீக்குச்சி மூட்டைகளை இறக்கும்போது ஏற்பட்ட உராய்வால் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவி ஆலையையே சூழ்ந்தது. இதில் தொழிலாளர்கள் மூவர் தீக்காயம் அடைந்தனர்.

கோவில்பட்டி அருகே விஜயாபுரியை சேர்ந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேரளத்தை சேர்ந்த கணேசன் மற்றும் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியை சேர்ந்த சுடலைமுத்து ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுப்படுத்தினர். காயமடைந்தோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்துக்கு வந்த கடம்பூர் செ. ராஜூ உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
