ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து… பரபரப்பு வீடியோ !

 
rail fire
 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தில்லியில் இருந்து ஜெய்சால்மர் நோக்கி சென்ற ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் அடிப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.

ரயில் நின்றதும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற சாதனங்களை பயன்படுத்தி தீயை குறுகிய நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ அணைக்கப்பட்ட பிறகு ரயில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கி ஜெய்சால்மர் சென்றடைந்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!