ஜூபிலி ஹில்ஸ் மாலில் தீவிபத்து... கண்ணாடியை உடைத்து வெளியேறிய தொழிலாளர்கள்... பரபரப்பு வீடியோ!

 
mall

ஜூபிலி ஹில்ஸ் சாலை எண் 36ல் உள்ள 5 மாடி தனியார் துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மேல் தளத்தில் வெல்டிங் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, தீப்பொறிகள் வெளிப்புற அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பலகையில் பட்டதால் தீப்பற்றி எரிந்தது. சில நிமிடங்களில் தீ மாலின் உள்ளகத்திற்கும் பரவியது.

அப்போது 3வது மாடியில் பெண்கள் மற்றும் 5வது மாடியில் தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். கருப்பு புகை சூழ்ந்ததால் வெளியேறும் வழி தெரியாமல் அவர்கள் பதற்றமடைந்தனர். 5வது மாடியில் இருந்த ராஜூ என்பவர் 3வது மாடியில் இருந்த தனது மனைவியை காப்பாற்ற விரைந்து சென்று, முன்புற கண்ணாடியை உடைத்து ஏணியின் உதவியுடன் பெண்கள் மற்றும் தொழிலாளர்களை கீழே இறக்கினார். பின்னர் தானும் பாதுகாப்பாக வெளியேறினார்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். மேலும் சில தொழிலாளர்கள் பக்கத்து கட்டிடத்தின் மீது குதித்து தப்பியதாக கூறப்படுகிறது. உயிர்சேதம் ஏதும் ஏற்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!