டி - மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து.. 2 மணி நேரம் போராடி தீயணைப்பு!
Feb 17, 2025, 10:44 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் டி - மார்ட் வணிக வளாகத்தில் உள்ள டீசல் பம்ப் அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள டி- மார்ட் வணிக வளாகத்தில் டீசல் பம்ப் அறையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ம.மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் இ.இராஜு மற்றும் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web