அதிகாலையில் அதிர்ச்சி... எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து...பெண் பயணி உயிரிழப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில், ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 2 மணியளவில் திடீர் தீ விபத்தில் சிக்கியது. ரெயிலின் பி1 மற்றும் எம்1 ஆகிய இரண்டு ஏ.சி. பெட்டிகளில் தீப்பற்றியதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
A fire accident occurred in two coaches of Train No. 18189 Tatanagar-Ernakulam Junction Super Fast Express, in the wee hours of Monday (December 29, 2025) near Yelamanchili Railway station in Anakapalli district of Andhra Pradesh, reports @sumithinduhttps://t.co/G7m0UsFVYO pic.twitter.com/fxEkiNT4kO
— The Hindu (@the_hindu) December 29, 2025
தீ விபத்தை கண்ட பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில் அருகிலுள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ரெயிலுக்குள் சிக்கியிருந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த விபத்தில் ஒரு பெண் பயணி உயிரிழந்தார். மேலும் சில பயணிகள் தீ விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
