சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!
சாத்தூர் மேல காந்தி நகரில் உள்ள தீப்பெட்டி ஆலையில் இன்று உற்பத்தி பணியின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீப்பெட்டி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீப்பெட்டி தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீப்பற்றி உள்ளது. இதில் ஆலையில் வைத்திருந்த மூலப்பொருள்கள் தீயில் எரிந்தன. தீ வேகமாக பரவியதால் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர்.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர்சேதம் இல்லை என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
