ரசாயன ஆலையில் திடீர் தீ விபத்து... பள்ளிகளுக்கு விடுமுறை!

 
தீ

தமிழகத்தில் சென்னையை அடுத்த  திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் தின்னர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த ரசாயன ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவி பயங்கரமாக எரியத் தொடங்கியது.

திருவள்ளூர்

மேலும் இந்த ஆலைக்கு அருகில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த தீ விபத்தால் அங்கு அதிக புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மாணவர்களை ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற்றினர். தீ அருகில் உள்ள பள்ளிக்கு பரவும் சூழல் ஏற்பட்டதால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆலையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web