எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து... பெண் மேலாளர் பலி!
மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50 பேர் பணியாற்றுகின்றனர். புதிய பாலிசி அறிமுகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டம் முடிந்து ஊழியர்கள் வெளியே செல்ல தயாராக இருந்தபோது, இரவு 8.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அலுவலகத்தில் ஏற்பட்ட தீ வேகமாக அனைத்து அறைகளுக்கும் பரவியது. இதனால் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். சிலர் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் தல்லாகுளம், திடீர் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ பெரிதாக இருந்ததால் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (55) உடல் கருகி உயிரிழந்தார். அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
