சபரிமலையில் சன்னிதானத்தில் திடீர் 'தீ'... பதறி ஓடிய பக்தர்கள்!

 
சபரிமலை

சபரிமலை அய்யப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஒரு ஆலமரத்தில் நேற்று மின்கசிவு காரணமாகத் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு சீசனை முன்னிட்டுச் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 8.20 மணியளவில், ஒரு ஆலமரத்தில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இதைக் கண்ட பக்தர்கள் அச்சமடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

சபரிமலை கூட்டம்

உடனடியாகத் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், விரைந்து செயல்பட்டு தீயை மரம் முழுவதும் பரவ விடாமல் தடுத்து முற்றிலுமாக அணைத்தனர்.

சபரிமலை

தீ விபத்து விரைவாக அணைக்கப்பட்டதால், பக்தர்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்புக் கருதி 18-ஆம் படி வழியாகச் செல்ல சுமார் 30 நிமிடம் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!