திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து... 600க்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சாம்பல் - ரயில் என்ஜினும் தீக்கிரை!

 
ரயிலில் தீ

கேரளாவின் மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் (Trichur) ரயில் நிலையத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகியுள்ளன. ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு (Platform 2) மிக அருகில் அமைந்துள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்தான் முதலில் தீ பிடித்துள்ளது.

வெயில் மற்றும் வாகனங்களில் இருந்த எரிபொருள் காரணமாக, தீ மிக வேகமாகப் பரவி அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 600 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுகளாக மாறின. அதுமட்டுமன்றி வாகனங்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில் என்ஜின் ஒன்றும் தீயில் சிக்கியது. அந்த என்ஜின் பெரும் பகுதி தீக்கிரையானது, ரயில்வே நிர்வாகத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சூர் மாவட்ட தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து நடந்தபோது ரயில் பயணிகள் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஷார்ட் சர்க்யூட் காரணமாகத் தீ பிடித்ததா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!