அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து... 3 பேர் பலி!
Jan 6, 2026, 17:35 IST
வடமேற்கு தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆதர்ஷ் நகரில் 5வது மாடியில் வசித்து வந்த அஜய் விமல் (45), அவரது மனைவி நீலம் (38) மற்றும் மகள் ஜான்வி (10) உயிரிழந்ததாகத் தெரியவந்தது. அஜய் விமல் தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்தவர்.

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ தீவிரமாக பரவிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
