அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி!

 
தீ விபத்து
கான்பூரில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சமான்காஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டடத்தின், முதல் இரு தளங்களில் ஷூ தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென எரிந்த தீ, மற்ற தளங்களுக்கும் பரவியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. 

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தீயானது 4வது மாடிக்கும் பரவியதால், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், 4வது மாடியில் வசித்து வந்த முகமது டேனிஷ், நஷ்னீன் சாபா தம்பதியர் மற்றும் அவர்களது 3 மகள்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?