நடுரோட்டில் ஓடும் காரில் திடீர் தீ... அலறிய பொதுமக்கள்!

 
தீப்பிடித்த கார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடுரோட்டில் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தனது அண்ணனின் நண்பரான ஆத்தூரை சேர்ந்த விமல் என்பவருக்கு சொந்தமான காரை இவர் ஓட்டி வந்துள்ளார். காரில் அவரது நண்பர் விஜயகுமார் என்பவரும் உடன் வந்துள்ளார்.

காரில் தீ

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம், அம்பேத்கர் சிலை அருகே இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென கார் இன்ஜினியில் இருந்து புகை வந்துள்ளது.

இதையடுத்து அவர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு பார்த்த போது கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தீயணைப்பு நிலைய அதிகாரி நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் 75 சதவீதம் கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web