கோவையில் பயங்கர தீ விபத்து: 3 மாடி விற்பனையகம் எரிந்து நாசம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த காட்டூர் ராஜரத்தினம் தெருவில் செயல்பட்டு வந்த இந்த விற்பனையகத்தில், இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாகப் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
திடீர் தீ: 3 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த அந்த வாகன உதிரிபாகங்கள் விற்பனையகத்தில் எதிர்பாராத விதமாகத் தீப் பற்றியது. அங்கிருந்த ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ மளமளவெனக் கட்டிடம் முழுவதும் பரவியது.
தீ விபத்து ஏற்பட்டவுடன் கட்டிடத்திற்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறுகலான தெரு என்பதால் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சற்றுச் சிரமம் ஏற்பட்டாலும், பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த வாகன உதிரிபாகங்கள் அனைத்தும் தீயில் கருகின. சேத மதிப்பு பல லட்சங்களை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது. தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளையும் சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சலுக்கு ஆளாகினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
