அரசு பழத்தோட்டத்தில் பயங்கர தீ விபத்து... ரூ.4 கோடி மதிப்புள்ள மர கன்றுகள் எரிந்து நாசம்!

 
அமெரிக்கா காட்டுத்தீ

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பழத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள மாமர கன்றுகளும், செடிகளும் தீயில் எரிந்து நாசமாகின.

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இந்த பழப்பண்ணையில் 15 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது. இந்த சுற்றுச்சூழல் பூங்காவை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கிறார்கள். மீதி உள்ள இடங்களில் அமைந்துள்ள பண்ணையில் மா, பலா, சப்போட்டா, வாழை கொய்யா, நெல்லி, பப்பாளி போன்ற பலவகை மரங்கள் உள்ளன.

காட்டுத்தீ

தற்போது கோடைகாலம் என்பதால் இங்குள்ள மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து காய்ந்து கிடக்கிறது. புல் பூண்டுகளும் காய்ந்த நிலையில் கிடக்கின்றன. இதில் குவிந்து கிடந்த இந்த காய்ந்த சருகு இலைகளில் நேற்று மாலை "திடீர்” என்று தீப்பிடித்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி பிடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் இந்த பண்ணையில் இருந்த சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாமரக்கன்றுகள், செடிகள் மற்றும் பழவகை செடிகள் தீயில் எரிந்து கருகி நாசமாகின.

கன்னியாகுமரி

இதனால் சுமார் ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தானாக ஏற்பட்டதா? அல்லது நாசவேலை காரணமா? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அரசு பழத்தோட்ட உதவி தோட்டக்கலை அலுவலர் அஜன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web