ஜப்பான் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து... 170 கட்டிடங்கள் எரிந்து நாசம்!
ஜப்பானின் ஒய்டா மாகாணத்தில் உள்ள சகனோஸ்கி நகரத்தில் அமைந்த முக்கிய துறைமுகத்திலிருந்து, நேற்று பெரிய தீ விபத்து நிகழ்ந்தது. இந்த துறைமுகம் கடற்புற மீனவ தொழிலில் முக்கிய பங்கு வகிப்பதுடன், மீன்களை இறக்க மற்றும் சரக்கு சேமிப்பிற்கு பயன்படும் கட்டிடங்களை கொண்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட தகவலின்படி, தீ முதலில் கிட்டத்தட்ட சில சிறிய கட்டிடங்களில் தொடங்கியதால், அது விரைவில் பரவியதோடு நெருங்கிய பிற கட்டிடங்களையும் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பற்றலின் வேகம் அதிகம் இருந்தபடியால் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் தொழிலுக்கான கிடங்குகள் எளிதில் தீயின் பாதிப்பிற்கு ஆளானது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பல வாகனங்களையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி தீ அணைப்புப் பணியில் முழு சக்தியுடன் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மட்டுமே தீ முழுமையாக கட்டுப்படுத்தபட்டது.
இச்சம்பவத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமானது. ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரித்தனர். இது போன்ற விபத்துகள் தொழில்துறை, மீனவ மற்றும் கடற்புற வாழ்வியல் பகுதியை சார்ந்த சமூகங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
