ஏலகிரி மலை பகுதியில் பயங்கர தீ விபத்து.. தீயணைக்கும் பணி தீவிரம்!

 
ஏலகிரி தீ
ஏலகிரி மலை பகுதிகளில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைத்து, தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக ஏலகிரி மலை உள்ளது. வார விடுமுறை நாட்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பத்தூரில் உள்ள் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

தீ விபத்து

ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் மலை அடிவாரத்தில் இருந்து 13 வளைவுகள் கொண்ட மலை சாலையை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று மலையின் 13வது வளைவில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து தீ ஏலகிரி மலை சாலையில் வேகமாக பரவியது. 

இதனால் மலைப் பகுதிகளில் உள்ள அரிய வகை மூலிகைகள் இந்த தீயில் கருகி வருகின்றன. வளைவு சாலையில் வந்து கொண்டிருந்த பயணிகள் மலையில் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அச்சத்தில் திரும்பி சென்றனர். இந்த புகை மூட்டத்தின் காரணத்தால் மலை பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீ

தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மலை அடிவாரத்தில் இருந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மலையில் வன உயிரினங்கள் அதிகம் வாழ்ந்து வருவதால் அவற்றை பாதுகாக்க தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web