நள்ளிரவில் பயண ரயிலில் தீ… ஏசி பெட்டிகள் எரிந்து சாம்பல், ஒருவர் உயிரிழப்பு!

 
ரயில்

அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக எர்ணாக்குளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் ஆந்திர மாநிலம் அனகப்பல்லி அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஏசி பெட்டிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் விஜயவாடாவை சேர்ந்த சந்திரசேகர் (70) உடல் கருகி உயிரிழந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேறு பெட்டிகளில் இருந்த பயணிகள் தீயை பார்த்து அலறி கூச்சலிட்டனர். அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் எலமஞ்சிலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தீ ஒரு ஏசி பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கும் வேகமாக பரவி, பயணிகள் உயிர் காக்க ஓடினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரண்டு ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எரிந்த பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட பின் ரயில் எர்ணாக்குளம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!