புத்தாண்டு கொண்டாட்டத்தில் 154 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீவிபத்து... பகீர் வீடியோ!

 
netharland

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நெதர்லாந்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள 154 ஆண்டுகள் பழமையான வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் தீ பரவ தொடங்கியது. தேவாலயத்தின் கோபுரத்தில் வேகமாக தீ பிடித்து எரிந்ததால், சில பகுதிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்த உடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினர். தீ அணைக்கப்பட்டாலும், அந்தப் பகுதி முழுவதும் நீண்ட நேரம் புகைமூட்டமாக காணப்பட்டது. அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. புத்தாண்டு நாளில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!