கலெக்டர் அலுவலகத்தில் தீவிபத்து!! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!!

 
நாகை தீவிபத்து

நாகப்பட்டினம் மாவட்டம் கலெக்டர்   அலுவலகத்தில்  இன்று ஜூலை 17ம் தேதி திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்   மக்கள் கோரிக்கையை மனுக்களாக எடுத்துக்கொண்டு   மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.  அப்போது நாகை  கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நாகை தீவிபத்து

ஆட்சியர் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள தமிழக  அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அலுவலகத்தின்  3  தளங்களிலும் பணியாற்றிக் கொண்ருந்த அலுவலர்கள் உடனடியாக வெளியேறினர். இந்த தீ விபத்தால் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து நாகை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீவிபத்து

இதனை அடுத்து, விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.   இந்த தீ விபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் லேப்டாப், கணினி, பழுதான ஆதார் கருவி உட்பட  பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீ விபத்துக்குக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்வபத்தால் கலெக்டர்  அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web