திருவண்ணாமலை மலை உச்சியில் திடீர் தீ விபத்து!
திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர அருணாசலேஸ்வரர் கோவில் பின்புற மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த மலையைச் சுற்றி கிரிவலம் வரும் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலை, பல்வேறு அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களைக் கொண்டது. கடந்த 3-ஆம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், 11 நாட்கள் தொடர்ந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து வந்த நிலையில், நேற்று காலை (டிசம்பர் 14) தீபக் கொப்பரை மலை உச்சியில் இருந்து கோவிலுக்கு இறக்கி எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில், மகா தீபக் கொப்பரை இறக்கப்பட்ட மறுநாளான நேற்று அதிகாலை, மலையின் குறிப்பிட்ட பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவியதில், அப்பகுதியில் இருந்த ஏராளமான மூலிகைச் செடிகள், மரங்கள் மற்றும் அரியவகைத் தாவரங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்துத் தகவலறிந்த திருவண்ணாமலை வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வனத்துறையினரின் இடைவிடாத முயற்சிக்குப் பின்னர் தீ மேலும் பரவாமல் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கிரிவலம் செல்லும் இந்த புனித மலையில் தீ வைத்த மர்ம நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது வனத்துறையினர் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் தற்போது கோரிக்கை வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
