2-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் தீ... சரக்கு கப்பல் அருகே பெரும்புகைமூட்டம்... போராடும் கடற்படை வீரர்கள்!

 
சரக்கு கப்பல்


 

கேரள கடற்கரையில் சிங்கப்பூா் நாட்டு கொடி பொருத்திய சரக்கு கப்பல் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனையடுத்து கப்பலில் இருந்த 20 கண்டெய்னர்கள் கடலில் சரிந்து விழுந்து மூழ்கின.நேற்று முதல்  தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க முடியாமல் இந்திய கடற்படை வீரர்கள் போராடி வருகின்றனர்.

சரக்கு கப்பல்

கொழும்புவில் இருந்து மும்பை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 என்ற சரக்கு கப்பலில் நேற்று ஜூன் 9ம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு  கேரள கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்துள்ளது.கப்பலில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு ஐஎன்எஸ் சூரத் வரவழைக்கப்பட்டது. மேலும், கடற்படை விமான தளத்தில் இருந்து டா்னியா் விமானம் ஒன்றையும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டது.

கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இருப்பதாகவும்  மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணிகளில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினா் ஈடுபட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்... அடுத்தடுத்து கரை ஒதுங்கும் கண்டெயினர்கள்.!
இந்தக் கப்பலில் எளிதில் பற்றி எரியக்கூடிய திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கப்பலில் தீப்பற்றி 24 மணிநேரத்தை கடந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் கடலோரப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கப்பலின் கண்டெயினர் பகுதியில் தீ தொடர்ந்து எரிந்து வருவதாகவும் வெடிப்புகள் இருப்பதாகவும் இந்திய கடலோர காவல்படை  தெரிவித்துள்ளது.  முகப்புப் பக்கத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் புகைமூட்டத்துடன் காணப்படுவதாகவும் தீயை அணைக்கும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது