மின்கசிவால் குடிசையில் தீ விபத்து… 2 கர்ப்பிணி வெள்ளாடுகள் கருகி சாவு!

 
குடிசை

 மீஞ்சூரில் பேரூராட்சியின் 16வது வார்டான ரெட்டிபாளையத்தில் நள்ளிரவு தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேஷ் என்பவரின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் வீடு முழுவதும் தீயில் சிக்கியது.

அந்த வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 கர்ப்பிணி வெள்ளாடுகள் வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தன. வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் அழிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த காவல்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!