காட்டுத்தீயில் கருகி 18 பேர் பலி... சிலியில் அவசரநிலை பிரகடனம்!
சிலி நாட்டில் பரவி வரும் காட்டுத்தீ பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். காடுகள், கால்நடைகள் மற்றும் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
மத்திய பையோபையோ, அடுத்துள்ள நூபிள் உள்ளிட்ட பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. நூற்றுக்கணக்கான வீடுகளும் தீயில் கருகின. பாதுகாப்பு காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் தீ அணைந்துவிடும் என நம்பி பலர் வனப்பகுதி அருகேயே தங்கியதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அண்டை நாடான அர்ஜென்டினாவிலும் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், தெற்கு படகோனியா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
