பகீர் வீடியோ... மும்பையில் 42வது தளத்தில் திடீர் தீவிபத்து.... !
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் பைகுலா கிழக்குப் பகுதியில் 57 தளங்களை கொண்ட கட்டிடம் அமைந்துள்ளது. அங்கே உள்ள மிக உயரமான கட்டடத்தின் 42வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.
Fire at @Byculla #mumbai #salsette27 building #Mumbai #fire@abpmajhatv @aajtak @mumbaitak @MumbaiPolice @mybmc @zee24taasnews @MumbaiLocal_ @lokmat pic.twitter.com/9yEAMp5UCq
— Sameer Joshi (@ijoshisameer) February 28, 2025
வெள்ளிக்கிழமை காலை 42வது தளத்தில் தீ விபத்து நேரிட்டது. தீயணைப்புத் துறையினருக்கு 10.45 மணிக்கு இதுகுறித்து அழைப்பு விடுத்துள்ளது.
உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.

இதுவரை அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்து நேரிட்டதும், கட்டடத்தின் பற்ற பகுதிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீ மற்ற தளங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
