பரோட்டா செய்ததால் வீட்டுக்கு வந்த தீயணைப்பு படை... வைரலாகும் வீடியோ!

 
பரோட்டா
 

பிரிட்டனில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் நள்ளிரவில் பராட்டா சமைக்க முயன்ற போது நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமையலில் இருந்து வந்த சிறிய புகையால் வீட்டில் இருந்த தீயணைப்பு எச்சரிக்கை மணி திடீரென ஒலிக்கத் தொடங்கியது. அந்த சத்தம் சுமார் 20 நிமிடங்கள் இடைவிடாமல் கேட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இரவு 11.30 மணியளவில் நடந்தது. எச்சரிக்கை மணி நிற்காததால் தீயணைப்புப் படையினர் அவரது வீட்டிற்கு வந்தனர். உணவு எதுவும் கருகவில்லை என்றாலும், பிரிட்டனில் உள்ள சென்சார்கள் மிக எளிதாக புகையை கண்டறிந்து அலாரம் அடிப்பதாக அவர் விளக்கினார்.

கடும் குளிரில் ஒரு சாதாரண பராட்டா சமையலுக்காக தீயணைப்புத் துறையினர் வர வேண்டிய நிலை ஏற்பட்டது தர்மசங்கடமாக இருந்ததாக அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சின்ன சின்ன சவால்களை இந்த வீடியோ சிரிப்புடன் எடுத்துக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!