பகீர்!! விபத்து நடந்த வாகனத்தில் டீசல் திருட்டு !! தீயணைப்பு வீரர்கள் அட்டூழியம் !!

 
டீசல்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நேற்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு பணிக்கு தீயணைப்பு வாகனத்தில் மீட்புகுழுவினர் விரைந்து சென்றனர். அங்கு மீட்பு பணிகள் முடிந்த நிலையில் வாகனத்தில் இருந்து இறங்கிய 4க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்து கிடந்த வேனில் இருந்து டீசல் டேங்கை திறந்து டீசலை பிடித்து, அவற்றை தீயணைப்பு வாகனத்திற்கு ஊற்றுகின்றனர். போலீசார் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. போலீசாரும் இவற்றை கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.

டீசல்

விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த டீசலை பொதுமக்கள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே தீயணைப்பு வாகனத்திற்கு ஊற்றும் வீடியோ அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. வீடியோ பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர்.

டீசல்

ஆனால், தீயணைப்புத்துறை வீரர்கள், விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளர் தரப்பிடம் கேட்டுக்கொண்டு, அதன்பின்னர் தான் டீசலை பெற்றனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.  
 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web