அடி தூள்!! யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களில் பெண்கள்!!

 
யுபிஎஸ்சி

இந்தியா முழுவதும் ஒரே நாளில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற  உயர்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு  2022  ஜூன் மாதத்தில் நடைபெற்றது.  இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் 2022 செப்டம்பரில்  முதன்மை தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  2023 ஜனவரி முதல் மே மாதம் வரை ஆளுமைத் தேர்வு நடைபெற்றது.

யுபிஎஸ்சி
இந்நிலையில், இறுதி தேர்விலும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 933 பேர் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் இந்திய அளவில் இஷிதா கிஷோர் என்பவர்  முதலிடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார்.  அந்த வகையில் தமிழகத்தில் சென்னை பெரம்பூரைச் சேரந்த ஜீஜீ என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

யுபிஎஸ்சி

 எலக்ட்ரீசியன் தொழில் செய்பவரின் மகளான இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். 2022ம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதியதில்  முதல் முயற்சியிலேயே சாதனை படைத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web