உலகின் முதல் அழகி போட்டியில் மகுடம் வென்ற கிகிஹகன்சன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!
உலக அழகி போட்டியில் முதல் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டின் கிகிஹகன்சன் (1929-2024) வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் 1951ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முதல் உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிகிஹகன்சன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மாடல் அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இந்த போட்டியில் உலகின் முதல் உலக அழகியாக கிகிஹகன்சன் மகுடம் சூட்டப்பட்டார். அப்போது அவருக்கு வயது 22. உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச அளவில் கிகிஹகன்சன் பிரபலமடைந்தார்.
தொலைக்காட்சி ஷோக்களிலும் பங்கேற்றார். உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பாக கிகிஹகன்சன் 1951ல் மிஸ் சுவீடன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் வயது முதுமை காரணமாக கடந்த நவம்பர் 4ம் தேதி தூக்கத்தில் உயிரிழந்ததாக உலக அழகி போட்டியை நடத்தும் அமைப்பின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை கிகிஹகன்சன் மகன் ஆண்டர்சனும் உறுதி செய்தார். கிகிஹகன்சன் மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
