WPL வரலாற்றில் முதல் இந்திய வீராங்கனை சாதனை... ஹர்மன்பிரீத் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
நவிமும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 4-வது பெண்கள் பிரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 1,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான 6-வது லீக் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் இந்த மைல்கல்லை எட்டினார். குஜராத் அணி நிர்ணயித்த 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் ஹர்மன்பிரீத் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் போட்டியில் தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர், ஆட்டமிழக்காமல் இருந்து மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். WPL வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 1,000 ரன்களைக் கடந்த வீராங்கனைகள் பட்டியலில் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்:
நாட் ஸ்கைவர்-பிரண்ட் (இங்கிலாந்து): 1,101 ரன்களுடன் முதலிடம். ஹர்மன்பிரீத் கவுர் (இந்தியா): 1,016 ரன்களுடன் இரண்டாம் இடம் (முதல் இந்தியர்).
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
