முதலிடம்.. வருவாயை அள்ளிக் குவித்தது திருச்சி கோட்டம்!

 
ரயில் நடைமேடை ரயில்வே நிலையம் திருச்சி

திருச்சிராப்பள்ளி கோட்டம், தெற்கு ரயில்வே, நடப்பு நிதியாண்டின் தேதி வரை (அதாவது, 01.04.2022 முதல் 10.02.2023 வரை) சரக்கு வருவாய் மற்றும் சரக்கு ஏற்றுதலில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சரக்கு ஏற்றுவதில் தெற்கு ரயில்வேயில் திருச்சிராப்பள்ளி கோட்டம் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்கூறிய காலகட்டத்தில் 10.952 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றப்பட்டு, சரக்கு போக்குவரத்து மூலம் வருவாயில் 86.805% அதிகரிப்பு மற்றும் சரக்கு ஏற்றுதலில் 53.325% அதிகரிப்புடன், கடந்த நிதியாண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடும் போது,  திருச்சிராப்பள்ளி கோட்டம் ரூபாய் 673.046 கோடி சரக்கு வருவாய் ஈட்டியுள்ளது. 

திருச்சி ரயில் நிலையம்

சரக்கு ஏற்றுதல் நிலக்கரி, உணவு தானியங்கள் மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றிச் செல்வதன் மூலம் அதிகரித்தது. இந்த ஏற்றுதல் மூலம் முறையே நிலக்கரி மூலம் ரூபாய் 465.054 கோடியும், உணவு தானியங்கள் மூலம் ரூபாய் 106.042 கோடியும், சிமென்ட் மூலம் ரூபாய் 43.624 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டியுள்ளது. நிலக்கரி ஏற்றுதல் மூலம் 135.641% வருவாய் அதிகரித்துள்ளது, உணவு தானியங்கள் ஏற்றுதல் மூலம் 61.239%  வருவாய்  அதிகரித்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளி கோட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சரக்கு கையாண்டதில் இதுவே சிறந்ததாகும், மேலும் நிதியாண்டு முடிவதற்குள் 11.685 மெட்ரிக் டன் என்ற இலக்கை விஞ்சும் வகையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி கோட்ட அணியின் அயராத முயற்சியால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web