ரைட்... ரைட்... கலக்குது கோவை பொண்ணு... குவியும் பாராட்டுக்கள்...!

 
ஷர்மிளா

கலக்குது கோவை  பொண்ணு... நம்ம ஊருப் பொண்ணு இத்தனை தூரம் தன்னம்பிக்கையோட வருதுய்யா... என்று நெகிழ்கிறார்கள் கோவை காந்திபுரம் மக்கள். அக்கா பஸ் வரட்டும்டி... என்று நெகிழ்ச்சியோடு காத்திருக்கிறார்கள் பள்ளி மாணவிகள். ச்ச்சும்மாவா? மாணவர்கள் பஸ் டே, ட்ரெய்ன் டே எல்லாம் கொண்டாட துவங்கியது இது போன்ற அன்பான ஓட்டுநர்கள், நடத்துநர்களால் தான்.

இன்றும் நிறைய பேரின் வாழ்க்கை பேருந்து, ரயில் பயணங்களின் நினைவுகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. அந்த ரூட்டில் வழக்கமாக செல்லும் பெரியவங்க என ஒரு ஸ்நேகமான பார்வைப் பார்த்து, நல்லாயிருக்கீயாம்மா... என்றபடியே படிகளில் மெல்ல ஏறுகிறார்கள். இதுக்கு மேல செய்யுற வேலையில என்ன திருப்தி வேணும் என்கிறார் ஷர்மிளா. கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர்.

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வருகிறார் ஷர்மிளா. பேருந்தை சும்மா அசால்ட்டாக வளைத்து ஓட்டும் ஷர்மிளா, ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்டார் என்றே கூறலாம். பயணிகள் பலரும் ஷர்மிளாவுடன் செல்பி எடுத்து செல்கின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ். சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார்.

ஷர்மிளா

தன்னுடைய தந்தை டிரைவர் என்பதால், ஷர்மிளாவுக்கு சிறுவயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதை தன்னுடைய கனவாகவும் கொண்டுள்ளார். 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். 

ஷர்மிளா ஏற்கனவே சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். குறிப்பாக கொரோனா தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது. தற்போது பேருந்து ஓட்டுநராக களத்தில் இறங்கிய ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

ஷர்மிளா

முன்னதாக தனது ஓட்டுநர் பணி குறித்து ஷர்மிளா பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, உனக்கு எதுல விருப்பமோ அதை செய்" என குடும்பத்தினர் கூறிவிட்டதால், அவரது கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. அதன்பிறகு முதலாவதாக தந்தையின் ஆட்டோவை ஓட்டி, பின்னர் தனியாக பயணிகள் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்க தொடங்கினார். தற்போது அவரது உழைப்பின் அடுத்த கட்டமாக தனியார் பேருந்தை ஓட்டி அசத்தி வருகிறார். இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web