மீன் பிரியர்கள் ஷாக்!! இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம்!!

 
படகு

ஆண்டு முழுவதும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்களுக்கு மட்டுமல்ல மீன்களுக்கும் விடுமுறை காலம் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க காலத்தில் தொடர்ந்து 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படும் . இந்த காலகட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க உபயோகிக்கும் படகுகள், வலைகளை சரிசெய்வர்.

படகு

இவர்களுக்கு நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம்  இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதையொட்டி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள், துறைமுகம் மற்றும் தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

மீன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், ஆந்திர கடல்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  கடலுக்கு சென்ற விசைப்படகுகள் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web