மீன் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு... ஆர்வமுடன் குவிந்த பொதுமக்கள்!

 
மீன்
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரித்திருந்ததால், அதிகாலை முதலே மீன்வாங்க பொதுமக்கள்,வியாபாரிகள் இன்று காலை அதிகளவில் குவி்ந்தனர்.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததாலும், கடுமையான வெயிலின் தாக்கத்தால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் பாடு இல்லாத காரணத்தாலும், கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். 

மீன் கடை மார்க்கெட் அசைவம்

நேற்று கரைக்கு திரும்பிய இந்த மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்தது. அவர்கள் பெரிய அளவிலான சீலா மீன் மற்றும் கிளை வாழை போன்ற மீன்களை அதிகளவில் கொண்டு வந்தனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டது.

தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்களை வாங்க தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். ஆனாலும் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டதால், கடந்த வாரத்தை விட நேற்று மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரம் ரூ.1600 வரை விற்பனையான சீலா மீன் வரத்து அதிகம் காரணமாக நேற்று கிலோ ரூ.1300-க்கு விற்பனையானது. அதுபோல் ஊளி மீன் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும், நண்டு, பாறை, விளைமீன்கள் கிலோ ரூ.450 முதல் ரூ.500 வரையும், கிளை வாழை மீன் கிலோ ரூ.300 வரையும், வங்கனை மீன் ஒரு கூடை ரூ.2,400 வரையும், சாளை ஒரு கூடை ரூ.2.500 வரையும் விற்பனையானது.

மீன்களின் விலை குறைத்து விற்கப்பட்டதால் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்து போட்டிபோட்டு வாங்கிச் சென்றனர். இதனால் துறைமுக பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், மீன்கள் விற்பநை அமோகமாக நடந்ததால் நாட்டு படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?