மீன்கள் விலை குறைந்தது... அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்!
இந்த வாரத்துடன் மீன் பிடி தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் மீன்கள் விலை குறைத்து விற்கப்பட்டது. இதன் காரணமாக இன்று அதிகாலை முதலே மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
தூத்துக்குடியில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்ததை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீன்பிடி தடைகாலம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அதேசமயம் நாட்டுப் படகு, பைபர் படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து விட்டு சனிக்கிழமைகளில் கரைக்கு திரும்பி வருவர். அப்போது மீனவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிக அளவு கொண்டு வருவார்கள். இதனால் சனிக்கிழமைகளில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகம் காணப்படும்.
இதைதொடர்ந்து பொதுமக்கள், வியாபாரிகள் அதிகஅளவில் குவிந்து மீன்களை வாங்கி செல்வது வழக்கம். கடந்த வாரம் மீன்பாடு இல்லாததால் விலை உயர்த்தி விற்கப்பட்டது. நேற்று கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த மீன்களை வாங்கி செல்வதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகாலை முதலே துறைமுகத்தில் குவிந்து காணப்பட்டனர். தொடர்ந்து மீன்களை போட்டி போட்டு கொண்டு வாங்கினர்.

அதிகளவில் மீன்கள் பிடித்து வரப்பட்டு இருந்ததால், விலை சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.1600-க்கு விற்பனையான சீலா மீன் கிலோ ரூ.1200-க்கு விற்பனையானது. அதுபோல் கிலோ ரூ.650- வரை விற்பனையான விளை மீன், ஊழி, பாறை போன்ற மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது. மேலும் குருவலை மீன் கிலோ ரூ.600 வரையும், கிளை வாழை கிலோ ரூ.250 வரையும், சூப்பர் நண்டு கிலோ ரூ.550 வரையும், மணலை மற்றும் நகரை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்பனையானது. மீன்கள் விலை சற்று பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
