மீன்களின் விலை 3 மடங்கு உயர்வு... தூத்துக்குடியில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்!

 
மீன்
 


மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் குவிந்ததால் மீன்களின் விலை 3 மடங்கு அதிகரித்தது. 

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று 225 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இரவு 9 மணிக்கு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் பிடித்து வந்த மீன்கள் ஏல கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால் மீன் வியாபாரிகள் அதிக அளவு குவிந்தனர். 

மீன் கடை மார்க்கெட் அசைவம்

கேரள வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கியதால் மீன்களின் விலை 3 மடங்கு வரை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தூத்துக்குடி மீன் வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுக்கமுடியாமல் தவித்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் 5 மணி நேரத்துக்குள் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மீன் மீன்கள்

இதனால் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 195 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளனர். இன்றும் கேரளா மீன் வியாபாரிகள் வருவார்கள் என்பதால், மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது