கடலில் தவறி விழுந்து மீனவர் பலி... விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த துயர சம்பவம் எதிரொலியாக விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.  

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்தவர் பேதுரு மகன் பிலவேந்திரன் (56). மீனவரான இவர், நேற்று காலை விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, திடீரென  பிலவேந்திரன் கடலுக்குள் தவறி விழுந்துவிட்டாராம்.

மீனவர்

இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தருவைகுளம் மரைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரெனிஸ் வழக்கு பதிவு செய்தார். 

தமிழக மீனவர்

இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து விசாரணை நடத்தி வருகிறார். மீனவர் உயிரிழந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படைகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது