நடுக்கடலில் மீனுடன் சேர்ந்த மடிவலை மேலே விழுந்ததில் மீனவர் மரணம்!

 
ராமலிங்கம்


நாகை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற போது,  நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மீது, மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்ததில் மீனவர் பரிதாபமாக பலியானார்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராமலிங்கம், திருஞானம், சங்கர், விக்னேஷ் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இவர்கள் நாகையிலிருந்து கிழக்கே 10 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் வலையில் பிடிபட்ட மீன்களை, மீனவர்கள் படகில் ஏற்றும் பணியை மேற்கொண்டனர். அப்போது பாரம் தாங்காத இரும்பு கப்பி திடீரென அறுந்த வலையை இழுத்து பிடித்திருந்த மீனவர் ராமலிங்கம் மீது மீனுடன் சேர்ந்த மடிவலை மார்பில் விழுந்தது.

இதில் மீனவர் ராமலிங்கம் விசைப்படகிலேயே சுருண்டு விழுந்து சக மீனவர்கள் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக மீனவர்

சக மீனவர்கள் உயிரிழந்த மீனவர் ராமலிங்கத்தின் உடலை நாகை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அவரது உடலைக் கண்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மீனவரின் உடலை போலீஸார் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது