பிப்ரவரி 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகில் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இலங்கை சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 ஆண்டுகள் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!