மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 230வது நாளாக 100 அடிக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஜூன் 9ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 230வது நாளாக நூறு அடிக்கும் மேல் நீடிக்கிறது. நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலே நீடிப்பதால் அணையில் மீன் வளம் பெருகும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
