நாளை மீனவர் குறை தீர்க்கும் கூட்டம்... கலெக்டர் அறிவிப்பு!

நாளை ஏப்ரல் 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 2025 ஏப்ரல் மாதம் முதல் வெள்ளிக்கிழமை 04.04.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பதிவு செய்த ஊர்த்தலைவர்கள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!