குஷியில் மீனவர்கள்...இன்று நள்ளிரவுடன் மீன் பிடி தடைக்காலம் முடிவடைகிறது!

 
இன்று முதல் 2 மாத மீன்பிடி தடைக்காலம்!கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!
 

தமிழகத்தில், மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் கடந்த 61 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு, மீன் பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜூன் 14ம் தேதி நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், மீனவ கூடாரங்களில் படகு பராமரிப்பு பணிகள், வலை பின்னும் பணிகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மீனவர்கள் உற்சாகத்தில்  உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. இந்த தடைகாலமானது 61 நாட்கள் அமுலில் இருக்கும்  இதனையடுத்து இந்த  தடைக்காலமானது இன்று ஜூன் மாதம் 14ம் தேதி வரை அமுலில் இருக்கும். இதன் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்களில்  சுமார் 6700 விசைப்படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இன்று முதல் 2 மாத மீன்பிடி தடைக்காலம்!கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கி வந்த ரூ.5,000 தற்போது ரூ.8,000மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையே தடைக்காலம் காரணமாக மீனவர்கள் இந்த தொழிலை விட்டு செல்லாமல் பாதுகாக்கிறது. எனவே இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் படகுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளுதல், வலை பின்னுதல் ஆகிய  பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில்  மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டை, கிச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர், சிருதூர், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம், ஆற்காடுதுறை ஆகிய கிராமங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், பழையார் உள்ளிட்ட மீன்பிடி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த ஓய்வு நாட்களை தங்கள் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம் மீன் படகு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை மீனவ கிராமமாக தரங்கம்பாடி உள்ளது. இந்த கடலோர பகுதியில் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி உட்பட  10 மீனவ கிராமங்கள் உள்ளன. அந்த மீனவ கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடித் தொழிலுக்கு 100க்கும் மேற்பட்ட விசைப் படகுகளையும், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஓய்வு காலத்தில் படகுகள், வலைகள் சீரமைக்கும் பணியில் தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜூன் 14ம் தேதி நள்ளிரவுக்கு பிறகு கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது