ஆரஞ்சு அலெர்ட்... மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க தடை!

தமிழகத்தில் வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ஆலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் சுமார் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதேபோன்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!